100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

Su.tha Arivalagan
Dec 15, 2025,05:11 PM IST

- அ.சீ.லாவண்யா


டெல்லி: 100 நாள் ஊரக வேலைத் திட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மேலும் தற்போது நடைமுறையில் உள்ள நிதி பங்களிப்பு முறையில் மாற்றம் செய்து, மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கைக் கணிசமாக குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த புதிய வரைமுறையின் படி, இதுவரை மத்திய அரசு வழங்கிவந்த 10 சதவீத நிதி பங்களிப்பு, மாநிலங்களின் பங்காக 40 சதவீதமாக உயர்த்தப்படலாம். இதனால் மத்திய அரசின் நிதி பொறுப்பு குறைந்து, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் சூழல் உருவாகும். அதே நேரத்தில், மொத்த நிதி ஒதுக்கீட்டில் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிநாட்கள் 125 நாட்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அனைத்து பணிகளும் மத்திய அரசின் புதிய வழிமுறைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட உள்ளது. 




விவசாய அறுவடை காலங்களில் 60 நாட்களுக்கு ஊரக வேலைத் திட்டப் பணிகளை குறைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இதில் இடம்பெறுகிறது.


இந்த புதிய முடிவுகள் நடைமுறைக்கு வந்தால், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்திலும், ஊரக மக்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இதுதவிர இந்தத் திட்டத்தின் பெயரையும் மாற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தற்போது இத்திட்டத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)