14வது ஆடவர் இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி.. தொடரின் லோகோ என்ன தெரியுமா?
- சரளா ராம்பாபு
சென்னை: 14 வது ஆடவர் ஹாக்கி இளையோர் (Junior) அணியின் உலகக் கோப்பை போட்டி சின்னமாக ஜல்லிக்கட்டு காளை முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் "ஹாக்கி இந்தியா" கூட்டுமுயற்சியில் இணைந்து நடத்தும் போட்டித் தொடர் இது. 21 வயதுக்குட்பட்டவர்கள் இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம். 54 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்தப் போட்டித் தொடரில் இடம் பெறும் போட்டிகள் அனைத்தும் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளன. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னையிலும் மதுரையிலும் நடைபெற இருக்கும் இப்போட்டித் தொடரில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து வீரர்கள் விமானம் மூலம் வந்து இறங்கிய வண்ணம் உள்ளனர் . இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்படும்.
சென்னையில் எம்ஆர்பி மைதானம் மற்றும் மதுரையில் ரேஸ் கோர்ஸ் மைதானம் ( உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி அமைக்கப்பட்டது) ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டித் தொடரின் லோகோாவக ஜல்லிக்கட்டுக் காளையை டிசைன் செய்துள்ளனர்.
தமிழக கலாச்சாரத்தை சர்வதேச அளவில் பிரதிபலிப்பதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளை வைத்திருப்போர் மற்றும் மாடு பிடிப்போர் ஆகியோர் இந்த லோகோ குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. 1928 முதல் 1958 வரையான காலம் இந்திய ஹாக்கியின் உச்ச கால கட்டம்., ஆகும். அந்த காலகட்டம் ஆறு ஒலிம்பிக் கோப்பைகளை தனது நாட்டிற்கு தந்த பெருமையை கொண்டது.
உலக இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் லோகோவை தமிழ்நாடு முழுவதும் மாநில விளையாட்டுத்துறை பிரபலப்படுத்தி வருகிறது. திண்டுக்கல்லில் அனைத்து பள்ளி மாணவர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பார்வைக்காக இந்த சின்னம் வீரர்கள் அணிவகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. திண்டுக்கல் ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் விழாவினை சிறப்பிக்க கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்திலும் இதே போல் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குமார் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுனர்.
(சரளா ராம்பாபு, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)