பாராமரிப்பு பணிகள்.. பொன்னேரி டூ கவரைப்பேட்டை இடையே 18 புறநகர் ரயில்கள் ரத்து..!
சென்னை:பொன்னேரி டூ கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொன்னேரி டூ கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.இதன் காரணமாக பொன்னேரி கவரப்பேட்டை வழித்தடங்களுக்கிடையே செல்லக்கூடிய 18 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.அதே போல் சென்னை டூ கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாறாக, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் டூ பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களைத் பெற தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளது.