அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 62 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு விலையில் பயணித்து வருகிறது. மேலும் அட்சய திருதியை வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தங்கத்தின் விலை கூடுமா குறையுமா என்று கணிக்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 22ம் தேதி ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 அதிரடியாக உயர்ந்தது. பின்னர் அடுத்த நாளான 23ம் தேதி சவரனுக்கு ரூ.2200 குறைந்தது. அதனைதொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராமிற்கு ரூபாய் 62 குறைந்து 8,940 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 496 குறைந்து, 71 ஆயிரத்து 520 க்கு விற்கப்படுகிறது. அக்ஷய திருதியை முன்னிட்டு இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் இன்றைய (28.04.2025) தங்கம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 62 குறைந்து ஒரு கிராம் ரூ.8.940க்கு விற்பனையாகிறது.
அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை 68 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.9,753க்கும் விற்பனையாகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.89,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,94,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,753 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,024ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,530ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,75,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,768க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753 க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,940 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8.940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,753க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய (28.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 110.90க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரு ரூபாய் உயர்ந்து 111.90ஆக இருந்தது .
இந்த நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை 90 காசுகள் குறைந்து ரூபாய் 111ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.