தங்கம் விலையில் அதிரடி மாற்றம்... சவரனுக்கு ரூ.1320 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1320 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து வந்தது. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம், அதன்பின்னர் தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 9ம் தேதி சரிவை சந்தித்த தங்கம், 10ம் தேதி ஏற்றம் கண்டது. இந்நிலையில், இன்று திடீர் என சவரனுக்கு ரூ.1320 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை குறைவு மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (12.05.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,880க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,688க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,140 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 88,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,88,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,688 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.77,504 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.96,880ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,68,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,688க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,703க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,688க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,688க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,688க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,688க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 8,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,693க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,463
மலேசியா - ரூ.8,862
ஓமன் - ரூ. 8,731
சவுதி ஆரேபியா - ரூ.8,630
சிங்கப்பூர் - ரூ. 8,900
அமெரிக்கா - ரூ. 8,585
கனடா - ரூ.8,849
ஆஸ்திரேலியா - ரூ.8,903
சென்னையில் இன்றைய (12.05.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 109 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.