தங்கத்தின் விலை சற்று குறைவு.. முகூர்த்த நாள் என்பதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி..!

Manjula Devi
May 02, 2025,11:04 AM IST


சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 1,640 ரூபாய் குறைந்த நிலையில், இன்று கிராமிற்கு மேலும் 20 ரூபாய் குறைந்துள்ளது.


தங்கத்தின் விலை கடந்த பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் பயணித்து வந்தது. அதன்படி, கடந்த 22ம் தேதி ஒரே நாளில்  தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.2200  அதிரடியாக உயர்ந்தது. பின்னர் அடுத்த நாளான 23ம் தேதி சவரனுக்கு ரூ.2200 குறைந்தது. அதனை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது.

இதனையடுத்து  செல்வச் செழிப்பை அள்ளித் தரும் தினமான அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை மேலும் குறையும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர்.  ஆனால் மீண்டும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து வந்தது.


இந்த நிலையில் மாதத் தொடக்கத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை  அதிரடியாக  கிராமிற்கு ரூபாய் 205 வீதம் ஒரு சவரனுக்கு 1,640 ரூபாய் குறைந்தது.இன்று மேலும் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி,  சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை கிராமிற்கு  20 ரூபாய் குறைந்து, ரூபாய் 8,755க்கு விற்பனையாகிறது. தற்போது முகூர்த்த நாள் என்பதால் தங்கத்தின்  விலை குறைவால் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.



சென்னையில் இன்றைய (02.05.2025) தங்கம்




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 20 குறைந்து,  ஒரு கிராம் ரூ.8.755க்கு விற்பனையாகிறது. ‌

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை  22 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,551க்கும் விற்பனையாகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 70,040 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.87,550 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,75,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,551 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,408 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.95,510ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,55,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,755 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,770க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,566க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 8,755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551 க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,755 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8.755க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,551க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,760க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,556க்கும் விற்கப்படுகிறது.



சென்னையில் இன்றைய  (02.05.2025) வெள்ளி விலை....


தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இன்று வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி,  நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 107 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று இரண்டு ரூபாய் உயர்ந்து, ரூபாய் 109 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது. 


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.


1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.