நேபாளம் வழியாக.. பீகாருக்குள் ஊடுறுவிய 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. காவல்துறை உஷார்

Su.tha Arivalagan
Aug 28, 2025,05:06 PM IST

பாட்னா:  நேபாளம் வழியாக பிகார் மாநிலத்திற்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால், அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ஹஸ்னைன், ஆதில் மற்றும் உஸ்மான் ஆகிய மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பீகார் மாநில போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தில் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாகிஸ்தானைச் சேர்ந்த ஹஸ்னைன் ராவல்பிண்டியைச் சேர்ந்தவர். ஆதில் உமர்கோட்டைச் சேர்ந்தவர். உஸ்மான் பகவல்பூரைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூவரும் அராரியா மாவட்டம் வழியாக பிகார் மாநிலத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.




இதுகுறித்து போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இந்த மூன்று தீவிரவாதிகளும் காத்மாண்டு வந்தடைந்தனர். கடந்த வாரம் பிகார் மாநிலத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.


இ்நத 3 தீவிரவாதிகளும் மாநிலத்தில் பெரிய சம்பவத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் யாரேனும் அவர்களைப் பற்றி தகவல் அறிந்தால், உடனடியாக போலீசாருக்குத் தெரிவிக்கலாம். போலீசார் இந்த விஷயத்தை தீவிரமாக கையாண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம் என்று நம்புகிறோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.