கீழக்கரை அருகே விபரீதம்.. சாலையோரம் நின்றிருந்த கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து!
- கலைவாணி கோபால்,
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சாலையோரம் நின்றிருந்த கார் மீது வேகமாக வந்த கார் மோதியதில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த 5 ஐய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த காரில் தெலங்கானாவைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர். வேகமாக வந்த கார் கீழக்கரையைச் சேர்ந்தது. 4 ஐய்யப்ப பக்தர்களும், கீழக்கரை காரில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விடியற்காலையில் கீழக்கரை கார் வந்தபோது, டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)