சாலையோர பூக்கள்....!
Jan 08, 2026,01:06 PM IST
- கபிசப்ரி தென்றல், தென்காசி
பயணச் சோர்வான இமைக்கு
புத்துணர்ச்சி தருவாயே
பாதசாரிகளின் பாதங்களுக்கு
பாதபூஜை தருவாயே
பாதசாரிகளின் மனங்களுக்கு
மலர் பூஜை செய்வாயே
வீசுகின்ற தென்றலுக்கு
மனம் மகிழும் மணம் தருவாயே
துள்ளல் நடை மழலைகளுக்கு
துள்ளும் மலராய் இருப்பாயே
விஞ்ஞான உலகமே
உன்னை மாயப் படுத்தியது
சாலை நெடுகிலும்
உன்னைக் காணவில்லையே
கண்கள் பூத்து உன்னை நானும் தேடுகிறேன்
காற்றும் கூட உன்னை தேடி பார்த்து போகிறது
வந்து விடு மீண்டும் இங்கு
தந்து விடு வாசம் நன்றாய்