வைரத்தின் கனவு விவசாயியின் கையில்!

Su.tha Arivalagan
Dec 29, 2025,04:44 PM IST

- அ.சீ.லாவண்யா


வாழ்க்கையில் பல படிகளை தாண்டி தான் ஒவொருவரும் வந்திருப்போம். ஆனால் வாழ்க்கையின் திரும்பும் திசை எங்கும் வலி நிறைந்ததே அந்த வைரத்தின் வாழ்வு. 


வைரம் என்றால் எல்லோரும் போற்றப்படும் வகையில் தான் நாம் பார்திருப்போம் ஆனால் அந்த வைரத்தின் வாழ்க்கை பாதையை சற்று விரிவாக பார்க்கலாம்.  ஒரு நாள் ஒரு வைரத்தின் அழுகுரல் கேட்டது. அங்கு இருந்த ஒரு விவசாயி செடியை நடுவதற்காக தான் வைத்திருந்த கோடாலியினால் மண்ணை தோண்டும் போது அதை பார்த்ததும் பொக்கிஷம் கிடைத்து விட்டது என்று தனக்கு கிடைத்த வைரத்தை தான் இருக்கும் இல்லத்தில் வைத்து பாதுகாத்து வந்தார். பின்னாளில் அந்த வைரத்தின் மதிப்பை உணராத அந்த முதியவர் தன் செய்யும் தொழிலான விவசாயத்தை பார்த்து கொண்டு இருந்தார்.


பின்பு அவர் செய்யும் பணியில் நிறைய செலவுகள் கூடியதால் மிகுந்த வேதனையில் தன் வசிக்கும் வீட்டில் அமந்து இருந்தார் விவசாயி. பின்னர் மீண்டும் ஒரு குரல் ஒலித்தது, பெரியவரே என்று வீட்டின் வாசலில் ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவரை பார்த்த விவசாயி என்ன வேண்டும் என்று கேட்டார். அவரோ தான் வெளி ஊரில் இருந்து வருகிறேன். எனக்கு வேலை சம்மந்தமாக இந்த ஊருக்கு வந்தேன். சற்று தாகம் அதிகமானதால் தான் இந்த வீட்டை பார்த்ததும் தண்ணீர் கிடைக்கும் என்று வந்தேன் ஐய்யா என்றார். 




அந்த விவசாயியோ தண்ணீர் எடுத்துவர உள்ளே சென்றார் அந்த தொழிலதிபரோ, விவசாயி வசிக்கும் வீட்டை பார்த்தார்ய அங்கு இருக்கும் நாற்காலி, வீட்டின் நிலைமை இதெல்லாம் பார்த்த அவர் சற்று கண் கலங்கினார். விவசாயி குடிக்க தண்ணிரையும் கொடுத்தார். அவரும் தண்ணீரைப்பருகினார். பின்பு அவர் தாகத்தை தீர்த்ததற்கு நன்றி என்று கூறினார். பின்னர், ஐய்யா என் தாகத்தை தீர்த்த உங்களுக்கு கைமாறு செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்.  விவசாயியின் முகம் வாட்டத்தில் இருப்பதையும் பார்த்தார் தொழிலதிபர். ஆனால் விவசாயியோ தன் மனதில் சிறிது கவலை கூட இல்லாமல் இருப்பது போல தெரியாமல் தன் முகத்தை வைத்து கொண்டார்.


ஆனால் அந்த தொழிலாதிபரோ ஏதோ வருத்தத்தில் உள்ளீர்கள் என்று வினவினார்? அதற்கு விவசாயி நான் நிலத்தில் உழுது வருகிறேன். எனக்கு உருவதற்கு உரம், விதை போன்றவற்றை வாங்க என்னிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால் என் பயிர் வேலைகளும் அப்படியே நிறுத்தத்தில் உள்ளது ஐய்யா. என்னிடம் போதிய பணமும் வசதியும் இல்லை ஐயா. நான் எனது பயிர் நிலத்தை உழ போதிய பணம் இல்லாததால் மன வருத்தத்தில் உள்ளேன் ஐய்யா என்று கூறினார்.


அந்த விவசாயியின் மன வேதனைகளை கேட்டு நின்று கொண்டிருந்த அந்த தொழிலதிபர் கண்களில் நீர் தேங்கியபடி நின்று கொண்டிருந்தார். ஐய்யா நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன் நீங்கள் அதை ஏற்று கொள்ளுங்கள் என்றார், அதற்கு விவசாயியோ ஐய்யா வேண்டாம் நீங்கள் தன்னிடம் உள்ள மன வேதனைகளை நின்று கேட்டீர்கள். நான் என் வருத்தத்தை உங்களிடம் பகிர்ந்துளேன். எனக்கு நீங்கள் கூறிய ஆறுதலே போதும் என்றார். பின்பு ஒரு  ஒளி பிரகாசமாக மின்னுவதை பார்த்தார் அந்த தொழிலாதிபர் ஐய்யா உங்களிடம் எப்படி இந்த வைரம் கிடைத்தது என்று கேட்ட போது நான் விவசாயத்தில் வேலைகள் செய்யும் போது எனக்கு கிடைத்தது ஐய்யா. நான் பத்திரமாக எடுத்து வைத்து விட்டேன் என்றார். 


ஐய்யா உங்களுக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது ஐய்யா. நீங்கள் ஏன் இதை சரியான முறையில் பயப்படுத்திருக்கலாமே என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி ஐயா நான் இதை பயன்படுத்தினால் என்ன நமக்கு நன்மை ஏற்பட போகும் என்று கூறினார். தொழிலதிபரோ ஐய்யா  நீங்கள் மிக விலை உயர்ந்த பொருளை வைத்து கொண்டு பயன்படுத்தாமல் இருக்கிறீர்களே என்று கூறினார். பின்னர், தன்னால் இயன்ற உதவியை அந்த வைரத்தின் மூலம் வைத்து விவசாயிக்கு நிலத்திற்கு தேவையான பொருள்களை நிரந்தரமாக கிடைக்கும் வகையில் செய்து கொடுத்தார். வீடு இருக்கும் நிலைமையை பார்த்த அந்த தொழிலதிபர் விவசாயிக்கு இருக்க நல்ல வீட்டையும் அமைத்து தந்தார்.


இதையெல்லாம் பார்த்த விவாசியியின் முகத்தில் கண்ணீர் வழிந்தது வார்த்தைகளால் மனதார அந்த தொழிலதிபரை பாராட்டினார், நன்றி செலுத்தினார். வைரமோ இப்போது அதன் இடமான நகை கடையில் பார்வையாளர்களுக்கு மத்தியில் வரவேற்கதக்க இடத்தில் அமர்ந்துத்துள்ளது. இப்போது தன்னை பாதுகாத்து யாரிடமும் அந்த வைரத்தை தவறான வழியில் விற்காமல் பாதுகாத்த அந்த விவசாயிக்கு அமர இடம் கொடுத்தது அந்த வைரம். இப்பொது அந்த வாரமும் தான் அமர வேண்டிய இடத்திலும் போய் அமர்ந்துந்துள்ளது.


இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் தான் உழைப்பு என்று தொடர்ந்து செய்தால் அதில் நேர்மையாக இருந்தால், தொடர்ந்து வரும் வைரம் போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் உயர முடியும். நம்மிடம் இருக்கும் நேரத்தையும் காலத்தையும் வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேற இந்த மூன்றும் நமக்கு கை கொடுத்து. வாழ்வின் எல்லையற்ற சந்தோசத்தையும் தேடி நம் கையில் வர செய்யும். கதையில் சொன்ன வைரம் விவசாயியின் கையில் வந்தது போல. வாழ்க்கையும் சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கும். வாழ்க்கை எல்லோருக்கும் வைரத்தை தராது. ஆனால் ஒருவர் பெற்ற வாய்ப்பை மற்றொருவர் வாழ்வை மாற்ற உபயோகிப்பதே உண்மையான ஒளியாகும். அந்த ஒளியே அன்றைய இரவில் வீட்டின் தாழ்வாரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த எளிய விவசாயியின் இதயத்தில் வைரத்தை விட அதிகம் பிரகாசித்தது


(அ. சீ., லாவண்யா தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)