உன் காதணி பாடும் கவி என்னை கவிஞனாய் மாற்றுதடி!
Nov 27, 2026,10:47 AM IST
"செந்தமிழ்ச் சுடர்" அ. கலைவாணி
வண்ணம் இல்லாமலே
என் எண்ணத்தை
கவர்ந்தாயடி
கார் முகிலாய் என்னை கடந்த
காலத்திற்கே
அழைத்து சென்றாயடி
கருப்பு வெள்ளையும்
இவ்வளவு அழகா
என வியக்க வைத்தாயடி
உன் உதட்டில் உள்ள சாயம்
என்னை காயம் ஆக்குதடி
உன் காதணி பாடும்
கவி என்னை கவிஞனாய் மாற்றுதடி
மாறுமென்று சொல்லடி
கண்மணியே!
(அ. கலைவாணி, MA. B ED (Eng) பட்டதாரி ஆசிரியர், கவிஞர், சிந்தனையாளர், சேலம்)