உன் இதழ்களின் மென்மையால்..!
Nov 28, 2026,10:58 AM IST
- "செந்தமிழ்ச் சுடர்" அ. கலைவாணி
மலரே!
உன் வண்ணத்தில்
என் எண்ணத்தை
பறிகொடுத்தேன்
உன்னை பறிக்க
மனம் இல்லாமல்
ரசிக்க மட்டுமே
செய்கிறேன்
மௌனமான என்
இதழ்கள்
உன்
மௌனம் கலைக்கிறதே
வானவில்லும்
திகைப்பில் உள்ளதே
உன்னை
கண்டு இத்தனை
வண்ணங்களா என்று!
(அ. கலைவாணி, MA. B ED (Eng) பட்டதாரி ஆசிரியர், கவிஞர், சிந்தனையாளர், சேலம்)