நினைவுகளை (நினைக்கும்) நனைக்கும் ஒரு நாள்!

Su.tha Arivalagan
Mar 26, 2026,01:39 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


மழைன்னா சில பேருக்கு ரோடு ஜாம், சிரமம், வேலைக்கு லேட்… அப்படித்தான் தோணும்.


ஆனா சில நேரங்களில் அந்த மழையே நமக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை தரும்.


இந்த நாளும் எங்களுக்கு அப்படித்தான். வானம் முழுக்க மேகங்கள், ரோட்டுல மழை துளிகள் சின்ன சின்ன முத்து மாதிரி விழுந்துகிட்டு இருந்தது.


கார்ல போய்க்கிட்டே இருக்கும்போது ஜன்னலுக்கு மேல விழும் மழை துளிகளை பாத்தா ஒரு தனி சந்தோஷம்.


அதுக்குள் ஒரு இடத்தில் நின்னு சூடான டீ மற்றும் காபி குடிச்சோம்.


மழை வெளியே கொட்டிக்கிட்டு இருந்தது… கையில் சூடான டீ கப்… அந்த நேரம் வந்த அமைதி, அந்த சின்ன சின்ன சிரிப்புகள் – இதெல்லாம் தான் வாழ்க்கைன்னு தோணும்.




பசங்ககளுக்கு மழை பார்த்தா இன்னும் அதிகமான குஷி. அவர்களுக்கு மழைன்னா வெறும் தண்ணீர் இல்ல; அது ஒரு விளையாட்டு, ஒரு சந்தோஷம். அவர்கள் சிரிப்பு தான் இந்த நாளை இன்னும் அழகாக மாற்றியது.

 

அந்த மழை நம்ம பயணத்தை நிறுத்தல. அதுக்கு பதிலா அந்த பயணத்தை இன்னும் அழகான நினைவாக மாற்றிவிட்டது. .


சில நாட்கள் அப்படித்தான் – சூரிய ஒளி இல்லாம இருந்தாலும், நம்ம மனசு முழுக்க ஒளியால் நிறைந்திருக்கும்.


மழை வந்து போயிடும்… ஆனா அந்த மழை கொடுத்த நினைவுகள் மட்டும் எப்போதும் நனைந்தபடியே இருக்கும்.


“மழையோடு சேர்ந்து பயணித்தால், ஒவ்வொரு பாதையும் அழகாக தெரியும்.”


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)