மாலை வந்து விட்டது.. என்னங்க போரடிக்குதா.. வாங்க ஒரு க்யூட் கதை படிக்கலாம்!

Su.tha Arivalagan
Nov 27, 2025,04:33 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


அவள் ஒரு அழகும் அறிவும்  நிறைந்த குழந்தை.


ஆனால் சிறுவயது முதல் அவளால் சற்று கால் வேகமெடுத்து நடக்க இயலாமல் இருந்தாள். அவளுக்கு விளையாட்டில் அதிக அளவில் ஆர்வம் இருந்தது. அவள்  படித்த  பள்ளியில் விளையாட்டுப் போட்டி ஒன்றில் பங்கேற்று பின் வீடு திரும்பினாள். அவளது தந்தை அவள் மீது அதிக பாசம் கொண்டிருந்தார் .


குழந்தை வருத்தப்படுமே என நினைத்து  அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றார். அவள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என நினைத்தார்.  மனம் வருந்தினார்.  அவளிடம் விபரம் கேட்காமலேயே அவளுக்கு  ஆறுதலாய் பேச ஆரம்பித்தார் அப்பா .


கவலைப்படாதே மா.  அதாவது தற்சமயம் சற்று உடல் நலமில்லாமல் இருக்கிறாய். அதனால் வருந்தாதே என ஆரம்பித்தார். அவள் சிரித்த முகத்துடன் அப்பா கவலைப்படாதீர்கள்.  இல்லையப்பா எனக்கு எந்த குறையும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். 

என் மனம் மகிழ்ச்சி யாக உள்ளது. விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகமாக இருக்கிறது. எனது உடல் நலமில்லை என்பதாலேயே எனக்கு ஜெயிக்க வேண்டும் என்கிற வைராக்கியம்  என் மனதில் ஆழமாக  பதிந்துள்ளது.


அதனால் எனது உழைப்பும் அதிகமாகவே உள்ளது. என் ஆர்வத்தை அறிந்ததால் இந்த சமூகத்தில் எனக்கு ஆதரவும் அதிகம்  கிடைக்கிறது. ஆகவே நான் எதிலும் ஜெயிப்பேன் என்று மனமகிழ்ச்சியுடன் சொன்னாள். அதைக் கேட்ட தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  பலவீனத்தை பலமாக்குவது நம்மிடம் தானே உள்ளது. தன்னம்பிக்கை என்றும் வெற்றியைத் தான் தரும்.




சரி இன்று ஒரு குறள் பார்ப்போமா...


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 

நற்றான் தொழாஅர்  எனின்.


விளக்கவுரை .


தூய  அறிவே உருவான இறைவனின் நல்ல திருவடிகளை நினைத்து தொழாமல்... விட்டு விட்டால் ஒருவன் எவ்வளவு கற்று இருந்தாலும்  ஒரு பயனும் இல்லை. அறிவே கடவுள் என்பதும்  அவன் அடிகளைத் தொழுவதே கல்வியின் பயன் என்பது

திருக்குறளின் கருத்து.  

               

அப்படியே ஒரு பழமொழி பார்ப்போமா..


ஐப்பசி மாதம் அழகு தூறல்.

கார்த்திகை மாதம் கனத்த மழை.


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)