வானம் அழைத்தது.. வாசலுக்கு வா!
Nov 21, 2026,03:45 PM IST
- கவிதை மழை அ.நவஜோதி அருண்
வறண்டு
போனான்
கவிஞன்....
வானம்
அழைத்தது
வாசலுக்குவா
என்னைக்
கருவாக்கென்று..
அதில்
முகம்மட்டுமே
வைத்து
வாழ்ந்த நிலா
சொன்னது.
என்னைக்
கருவாக்கென்று
சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்கள்
நச்சரித்தது...
எங்களைக்
கருவாக்கென்று..
என்னைக்
கருவாக்கென்று
பின்
கவிஞனின்
கவிதைக்கு
ஏது? வறட்சி?
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)