எல்லா நேரமும் பொழிவாயா?

Su.tha Arivalagan
Nov 16, 2026,03:39 PM IST

- கவிதை மழை அ. நவஜோதி அருண்


எல்லா நேரமும்

பொழிவாயா? 

இல்லையென்றது..! 


எனக்காகப்

பொழிவாயா.? 

எதற்கென்றது..? 


ஒரு போட்டி

வைக்கட்டுமா? 

சரியென்றது...! 


நான்

எப்போதெல்லாம்

கவலைப்படுகிறேனோ? 

அப்போதெல்லாம்... 




என் மீது மட்டும்

பொழியவேண்டும்

என்றேன்.

பருவம் தப்பிய

மழையிடம்...! 


உற்சாகமாக

ஏற்றுக்கொண்ட

அது.... 


இடைவிடாமல்

பொழிந்து

கொண்டே.... 

இருக்கிறது. இப்போது வரை

என்மீது மட்டும்.. ! 


அடைமழையை

சிறைபிடித்த

கவிஞன்என்பதா? 

அல்லது... 


கவிஞனுக்கு

இடைவிடாத

கவலையென்பதா?


(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர்.  சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)