கார்த்திகை மாதத்து நாயகனே.. அழகனே.. முருகனே!

Su.tha Arivalagan
Nov 27, 2025,04:08 PM IST

- கலைவாணி ராமு


கார்த்திகை மாதத்து நாயகனே

அழகனே முருகனே..

ஆனைமுகன் சோதரனே...

இன்முகம் கொண்டவனே...

ஈசனின் நெற்றிப் பொறியில் பிறந்தவனே...



உமையாளின் அன்பு புதல்வனே...

பழத்திற்க்காக பழனி மலை அமர்ந்தவனே...

பிரம்மனுக்கே மந்திர உபதேசம் செய்தவனே...

பிரணவ மத்திரத்தை தந்தைக்கு  உபதேசித்து 

தகப்பன் சாமி என பெயர் பெற்றவனே...

கார்த்திகை பெண்களாள் வளர்க்கப் பட்டவனே...

சூரணை சம்ஹாரம் செய்தவனே...

திருமாளின் மருமகனே...

தெய்வ யானையின் மனாளனே...

வானவர்களின் துயர் துடைத்தவனே...

திரு முருகாற்றுப் படையின் நாயகனே...

வள்ளியின் காதலனே...

மயில் வாகனனே...

உன்னை தினமும் மனமுருகி வேண்டி நின்றோம் 

வெற்றி வேலனே முருகா சரணம் சரணம் சரவணபவா


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)