மதிப்பு
- க.யாஸ்மின் சிராஜூதீன்
மதிப்பு என்பது தேவையை பொருத்தது....
மண்ணோ, பொருளோ, மனிதனோ....
போட்டி என வந்து விட்டால்
சொல்லவா வேண்டும்..
தூசி கூட விலைமதிப்பு பெறும்...
மனிதனுக்கே மதிப்பு குணத்தைவிட
அவனிடமுள்ள பணத்தால் தானே நிர்ணயிக்கப்படுகிறது.....
பணம் சுழலும் பல இடங்களிலும்..
நேற்று அவனிடம்
இன்று இவனிடம் நாளை யாரிடமோ என மாறி மாறி
உலா வரும்...
நீ நீயாக இரு எங்க சுற்றினாலும் உன் குணமே வெல்லும்....
சுற்றியவர்கள் இளைப்பாற உன்னைத்தான் நாடி வருவர்...
அன்று தெரியும் குணம்தான் மதிப்பு தரும் என்று...
குணத்தால் கிடைக்கும் மதிப்பு
என்றும் குன்றாது...
பணத்தால் கிடைக்கும் மதிப்பு
பறந்து கொண்டே இருக்கும் பல இடங்களுக்கு....
சிறுதுறும்பும் பல்குத்த உதவும் என்பர்...
எதையும் யாரையும் ஏளனம் செய்யாதே...
அருகில் நிற்கும் எண்களால் பூஜ்ஜியம் மதிப்பு பெறுவது போல...
காலம் துணைநின்றால் எல்லாம் மதிப்பு பெறும்....
மதிப்பு என்பது பார்வையில் இல்லை ...
அது காலத்தின் கையில் உள்ளது....
நம் குணத்தில்
உள்ளது...
நாம் எதை பிறருக்கு கொடுக்கிறோமோ அதுவே திரும்ப கிடைக்கும்....
நல்லதை விதைப்போம்...
குணத்தால் வெல்வோம்
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)