வ.உ.சிதம்பரனார்.. சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே!

Su.tha Arivalagan
Nov 18, 2025,09:04 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவரே!

சிறு வயதிலே வீரமிக்கவரே!

சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவரே!

ஏழை எளிய மக்களுக்காக வாதாடியவரே!

ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவரே!

பல இயக்கங்களை நிறுவியவரே!

சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரரே!

பலமுறை சிறைக்குச் சென்றவரே!

சுதேசி இயக்கத்தை நிறுவியவரே!




சுதேசி கப்பலுக்கு சொந்தக்காரரே!

சிறையிலும் எழுத்துப்பணியை மேற்கொண்டவரே!

சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே! 

எங்களுக்காக ஓடாய்த் தேய்ந்தவரே

இன்றிருக்கும் எங்கள் நிலைக்கு

நீங்கள் அன்று இயக்கிய கப்பலும்

அந்நியருக்கு எதிராக உரத்து கொடுத்த குரலுமே காரணம்

சிங்கத் தமிழனாய்

எங்கள் கடைக்கோடி தூத்துக்குடியிலிருந்து

தமிழ்நாட்டுக்கே குரல் கொடுத்த தங்கத் தமிழனே

உனை மறவோம்.. உன் புகழ் பாடுவோம்!


கவிதை: வீ.யோகாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, சின்ன எரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி,  மயிலாடுதுறை