மனமே நலமா?
- அ.சுபாலட்சுமி
ஹாய் நண்பர்களே, எப்படி இருக்கிங்க? நான் தான் உங்க மனம் பேசுறேன். தினமும் ஏதோ ஓர் சிந்தனைலேயே என்ன வச்சுருக்கீங்க. அதை சந்தோசமா அனுபவிச்சா பரவாயில்லை. ஆனா ஏன் தேவையில்லாததை சேர்த்து வச்சு கஷ்டபடுத்துறீங்க?
சரி, இன்னைக்கு என் பிறந்தநாள்.. அட ஆமா, உலகம் முழுவதும் என் நலத்துக்காக கொண்டாடுறாங்க (உலக மனநல நாள்). என் நிலைமையப் பார்த்தீங்களா, நான் தான் எல்லாத்தையும் நினைக்கிறேன். ஆனா யாருமே என்னை நினைக்கிறதில்ல. அதனால என்னையை நினைக்கிறதுக்கு இன்னைக்கு ஓரு நாளாவது என் கூட பேசுறீங்களா?
உங்க உடம்புல நான் எங்க இருக்கேன் சொல்லுங்க? தமிழ்ல கேட்டா நெஞ்ச காமிக்கிறீங்க.. ஆனா ஆங்கிலத்துல கேட்டா மண்டைய காமிக்கிறீங்க சரி தானே? ஆனா நான் எங்க இருக்கேன்? ஹாஹா குழப்பமா இருக்கா.. பொறுங்க பொறுங்க எப்படியும் அதுக்கும் என்னைதானே குழப்புவீங்க. நானே சொல்லுறேன்.
நான் உங்களுக்குள்ள எல்லாமுமாக இருக்குறேன். உங்களை இயக்குற சக்தி என் பொறுப்பு. ஆனா, இப்ப இருக்குற இந்த இயந்திர உலகத்துல என்னை நிம்மதியாவே வச்சுக்க மாட்டீங்கிறீங்க. உடம்ப பாத்துகுற அளவுக்கு கூட என்னை பாத்துக்க மாட்டிங்கிறீங்களே.
முன்பெல்லாம், உங்கள மாதிரியான மனிதர்கள் கிட்ட பேசி என்னை சந்தோசப்படுத்துவாங்க. ஆனா இப்போ எனக்கு சம்பந்தமில்லாத இயந்திரத்துக்கூட பேசிகிட்டு என்னை சந்தோசபடுத்துறேன்னு நினைச்சுகிறீங்க. என் பிறந்த நாளைக்கு உங்ககிட்ட என்னோட சில ஆசைகளை கேட்குறேன், தருவீங்களா? ப்ளீஸ்.
காலையில எழுந்துருச்சதும் மொபைல தேடாம கொஞ்ச நேரம் என் கூட பேசுங்க. இயந்திரத்தைப் பார்த்து சிரிக்காம என்னோட நண்பனான உங்களுக்கு பிடித்தவங்ககிட்ட பேசுங்க. உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யுங்க. சரியா. அப்போ நானும் ஹாப்பி நீங்களும் ஹாப்பி.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)