பேருந்துப் பயணத்தில்.. எறும்புக் கூட்டம் போல் விரைந்தோடிய மக்கள்!
Oct 02, 2026,03:35 PM IST
- அ.சுபாலட்சுமி
பேருந்து பயணத்தில் தோன்றிய சில கவி வரிகள்..
பேருந்து சத்தமும்
இசையாய் எண்ணி
நிம்மதி உறக்கத்தில்
பயணிக்கும் மக்கள்
--
பேருந்துக்குள் இருந்து வரும் ஏசி காற்றுக்கும்
சன்னல் வழியாக வரும் இயற்கை காற்றுக்கும்
நடந்த சண்டையில்
இறுதியில் வென்றது இயற்கை காற்று
--
தன்னை நம்பி வந்திருக்கும் மக்களை உறங்க வைத்துவிட்டு
தனக்கான உணவை (பெட்ரோல்) எடுத்து கொண்டது பேருந்து.
அப்படியென்றால் பேருந்தும்
ஓர் தாய் தானோ?
--
முயல் வேகத்தில் சென்ற பேருந்து
ஆமை வேகத்திற்கு மாறியது
காரணம்
அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...!
--
வேகமாய் சென்றுகொண்டிருந்த பேருந்து
எறும்புக் கூட்டம் போல் விரைந்தோடிய மக்கள்-
கழிப்பறையை நோக்கி...
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)