தனிமை!
Nov 10, 2026,04:50 PM IST
- அ.சுபாலட்சுமி
தனிமையின் வலியையும்
மகிழ்ச்சியாய் கடந்துவிட்டால்
வாழ்க்கை என்றும் இன்பமே.
-
நம்மை சிரமமாக
சிந்திக்காத
ஒரே ஜீவன்
நாம் தான்.
-
தனிமையை ரசிக்க பழகிக்கொள்,
ஏனெனில் அது உனக்கு
பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
-
என் தனிமையை கண்டு தான்
தன் பாசத்தை மழைத் தூறலாய்
காட்டுகிறதோ இந்த இயற்கை?
-
மனிதா,
நீ பிறக்கும் போதும் தனிமை தான்;
இறக்கும் போதும் தனிமை தான்;
இடையில் எதற்கு துணை?
நீயே உனக்கு துணை.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)