ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்!

Su.tha Arivalagan
Oct 12, 2026,03:27 PM IST

- அ. சுபாலட்சுமி


'ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்' என்பது பலரும் தவறாகப் புரிந்து வரும் திரித்து வழங்கும் பழமொழியாகும். 


தவறான கருத்து:


வலியோர்களுக்கு (யானை போன்ற பலம் பொருந்தியவர்களுக்கு) ஒரு காலம் வந்தால், எளியோர்களுக்கு (பூனை போன்ற சிறியவர்களுக்கு) ஒரு காலம் வரும் என்று பலரும் இதைப் பலவீனமானவர்களின் வெற்றி குறித்த சமூகக் கருத்தாகத் தவறாகப் பேசி வருகின்றனர்


உண்மையான பழமொழி




"ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு ஒரு காலம் வரும்" என்பதே இதன் சரியான வடிவமாகும்.


விளக்கம்:


ஆநெய் = பசுவின் நெய் ('ஆ' என்றால் பசு).

பூநெய் = தேன் ('பூ'வில் இருந்து எடுக்கப்படும் நெய்/தேன்).


உண்மையான பொருள்:


இளமைக்காலத்தில் பசு நெய்யை விரும்பி உட்கொண்டு உடலை வலுவாகப் பேணலாம். ஆனால் வயது ஏறும்போது பசு நெய் உடலுக்குக் கெடுதல் விளைவித்து கொழுப்பை அதிகரிக்கும். 


அந்தக்காலத்தில் பசு நெய்க்குப் பதிலாகத் தேனைப்  பயன்படுத்த வேண்டும். வாழ்நாளில் ஒவ்வொரு காலத்திற்கேற்ப நமது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு மருத்துவ மற்றும் வாழ்வியல் அறிவுரை இதுவாகும். மருத்துவத்திலும் சிறந்தவர்கள் நம் தமிழர்கள். அவர்கள் சொன்ன பழமொழியும் நம் நலத்திற்காகவே.


சரியான அர்த்தம் புரிந்து அவற்றைப் பின்பற்றுவோம்.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)