Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

Su.tha Arivalagan
Oct 14, 2026,12:06 PM IST

- அ.சுபாலட்சுமி


"அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்" .. அப்படீன்னா என்ன தெரியுமா.. வாங்க பார்க்கலாம்.


பழமொழிகள் எல்லாமே இப்போது புது மொழிகளாக அதாவது மாறிய அர்த்தத்துடன்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பழமொழியும் மாறிய அர்த்தத்தில்தான் இதுவரை புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.


"ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்" என்று மருவிய பழமொழிதான் மேலே நாம் பார்த்த ஒரிஜினல் பழமொழியாகும்.




பொதுவான பொருள்


ஒரே நேரத்தில்  இரண்டு வெவ்வேறான வேலைகளில‍ கவனம் செலுத்தினால், எதையும் முழுமையாகச் செய்ய முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு முரணான காரியங்களில் ஈடுபட்டால் இரண்டிலும் வெற்றி பெற முடியாது என்பதை இது குறிக்கிறது. 


விளக்கம் மற்றும் சொற்பிறப்பு:


அயம் என்றால் குதிரை என்று பொருள். செயம் என்றால் பூமி அல்லது நிலம் என்று பொருள். 


பழமொழியின் ஆழ்ந்த அர்த்தம்: அந்த காலத்தில் போர்வீரர்கள் போர் புரியும் போது குதிரை மீது ஒரு காலும் நிலத்தில் மீது இன்னொரு காலும் வைத்தால் அவர்களால் போர்புரிய முடியாது என்பதை குறிக்கிறது.


காலப்போக்கில் இது கொச்சையாக மாறி "ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்" என்று வழக்கில் வந்துவிட்டது.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)