பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

Su.tha Arivalagan
Sep 29, 2026,03:39 PM IST
- அ. சுபாலட்சுமி

"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" என்பது உணவருந்தும் சிறப்பையும், போர்க்கால உத்தியையும் அல்லது வலது கையின் இயக்கத்தையும் குறிக்கும் ஒரு பழமொழி ஆகும். 

பொதுவான பொருள்

பந்திக்கு முந்து: உணவு அருந்தும் பந்திக்கு எப்போதுமே முந்திக்கொண்டு (முதலில்) செல்ல வேண்டும்.

படைக்குப் பிந்து: போர்க்களத்தில் எதிரிகளை எதிர்கொள்ளும் போது அல்லது சண்டைக்குச் செல்லும் போது பின்னால் நின்றால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

உண்மையான / ஆழமான அர்த்தம் (விடுகதை விளக்கம்)





இது உண்மையில் ஒரு விடுகதை பாணியில் உருவான சொற்றொடர் ஆகும். இதன் நேரடிப் பொருள் வலது கை ஆகும்.

பந்திக்கு முந்தும்: நாம் பந்தியில் சாப்பிட உட்காரும் போது உணவை எடுக்க நம் வலது கைதான் முதலில் முந்திக் கொண்டு செல்லும்.

படைக்குப் பிந்தும்: போரில் வில்லில் நாணைப் பூட்டி அம்பை எய்யும் போது, வலது கையை எவ்வளவு தூரம் பின்னோக்கி இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாகப் பாய்ந்து எதிரியைத் தாக்கும்.

இதுவே பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்று நம் வலது கையை குறித்து கூறிய விடுகதை ஆகும். தமிழர்கள் வீரர்கள் அன்றி கோழைகள் அல்ல.

எனவே மை டியர் மக்களே.. இனிமேல் இந்தப் பழமொழியை சாப்பாட்டு சமாச்சாரத்திற்குப் பயன்படுத்தாமல் தவிர்ப்போம்.. ஓகேவா!

(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)