"புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று" - இதோட உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

Su.tha Arivalagan
Oct 31, 2026,10:40 AM IST

- அ.சுபாலட்சுமி


எத்தனையோ பழமொழிகளை நாம் தப்பும் தவறுமாக புரிந்து கொண்டு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உண்மையான அர்த்தம் புரியும் போது நமக்கே வியப்பாக இருக்கும்.


"புண்பட்ட மனதை புகவிட்டு ஆற்று" என்பது தமிழ் பழமொழி ஆகும். 


பலர் இதனை "புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து" என்று தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அதாவது, மனம் கஷ்டப்படும்போது சிகரெட், பீடி அல்லது புகையிலை பிடித்துக் கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. 


உண்மையான பழமொழி:




"புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று".


விளக்கம்:


‘புகவிட்டு’ என்றால் ‘புகுத்துதல்’ அல்லது திசைதிருப்புதல் என்று பொருள். மனம் புண்பட்டு அல்லது காயப்பட்டு சோகத்தில் இருக்கும்போது, அதே துயரத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிராமல், மனதை வேறு ஏதாவது ஒரு நல்ல அல்லது பிடித்தமான ஆக்கப்பூர்வமான செயலில் ‘புகவிட்டு’ (ஈடுபடுத்தி) அந்தத் துன்பத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதே இதன் உண்மையான விளக்கம்.


எவ்வளவு பெரிய அர்த்தத்த இந்தப் பழமொழி நமக்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் எப்படித் தவறாக பயன்படுத்தி வருகிறோம் பாருங்கள்!


பழமொழி ஒருவரை நல்வழி படுத்துமே அன்றி தீய வழியை ஒருபோதும் காட்டாது.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)