சிந்தனைச் சிதறல்.. நிலையில்லா உலகில் எதுவும் நிலை இல்லை!
- அ.தாமஸ்
நிலையில்லா உலகில் எதுவும் நிலை இல்லை என அறிந்து அதைத் தினம் நினையாமல் இருப்பதே நிம்மதியை நமதாக்கும். இந்நிம்மதியும் கூட நிலையில்லை என்பதை நாம் அறியும் நிலையே மன அமைதிக்குக் கொடுக்கும் மறுவாழ்வு என உணர்ந்து மனம் மகிழ்வோம்.
பற்றற்று இருப்பதில் பற்றுக்கொண்டு, வருவதை ஏற்று, இருப்பதை நினைத்து, மறுப்பதை மறந்து வாழும் நிலையை நாம் ஏற்றால், வாழும் வாழ்க்கை வளமாகும்; வாழ்க்கையின் இன்பம் நமதாகும்.
குறையோடு இருப்பவர்களின் குறையை அடையாளப்படுத்தி நம் மனதைக் கறைபடுத்தாமல், இயன்றால் அவர்களின் குறைகளைக் களைந்து நிறைவாய் வாழும் வழி கொடுங்கள், இல்லையேல் அவர்கள் குறை நினையாமல் வாழ வழிவிடுங்கள்.
இவ்வுலகில் எந்த ஒன்றும் நிலையில்லை; இன்று இருப்பது நாளை இல்லாமலும் போகும்; இன்று இல்லாதது நாளை நமதாகவும் மாறும். இருப்பதை நினைத்து இன்று இருக்கும் நிலையில் மகிழ்ந்திடுங்கள்; நாளை இருக்கும் என்று நினையாமலும், கனவில் தினம் நனையாமலும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)