சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!
- அ. தாமஸ்
குறையை குறைவாய்க் காண்போம் நிறையையோ நிறைவாய்க் காண்போம். குறையை குறைவாய்க் கண்டு நிறையை நிறைவாய்க் காண்பவர்களே குறையே இல்லாத மகிழ்வைக் காண்கிறார்கள்.
குறை காணா மனமே இறைவனின் வரம். நிறைவு வேண்டுமென்று நினைத்து இறையிடமே குறையைக் கண்டால் நிறைவு எப்படி குறைவில்லாமல் கிடைக்கும். எனவே தவிர்ப்போம் குறை காணும் மனதை.
உடல் ஊனத்தைக் கூட குறையாகக் காணாமல் அதிலும் ஒரு நிறைவைக் கண்டததால் தான் பல அறிஞர்கள் ஊனத்தைக் கடந்து உயர் ஞானத்தை அடைந்து இவ்வுலகை வென்றிருக்கிறார்கள்.
குறை காணும் மனதை விடுத்து குறையிலும் ஒரு நிறைவைக் காணும் மனதை நமதாக்கி தவறுவோரைத் தட்டிக் கொடுத்து" பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம்" என மகிழ்ந்து பாராட்டும் பொழுது பல உறவுகளும் நம் தவறுகளையும் மறந்து மகிழ்ச்சி பாராட்டும்.
அங்கே புது உறவுகளும் உணர்வோடு உதயமாகும், நாமும் பலர் விரும்பும் இதயமாவோம்.எனவே உடலிலும் உறவிலும் குறை கடந்து நிறைவைக் காண்போம். வாழ்வில் பல உயர்வைக் காண்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)