சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
Jul 13, 2026,01:23 PM IST
- அ.தாமஸ்
குருட்டுப் பூனை திருட்டுப்பால் குடிக்க முடியாது.அதுபோல தவறு என்றே தெரியாத ஒன்றை நாம் செய்வது தவறானாலும் அந்த தவறு நமதாகாது.
வாழ்க்கையில் தவறக் கூடாது; எவ்வுறவையும் சிதறக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் அறியாமல் தவறி தவறக்கூடாத உறவையும் சிதற விடுகிறார்கள். இத்தகையவர்கள் தவறினால் கூட நாம் அத்தகையவர்களைத் தவறவிடாது என்றும் நல் உறவாகவே காப்போம்.
அறியாமல் தவறுபவர்களை அந்நிலை அறிந்து மன்னிப்போம்; அறிந்தே தவறுபவர்களை எந்நிலையிலும் மீண்டும் தவறாமல் தண்டிப்போம்.
தவறுவது தவறில்லை தவறு என்று தெரிந்தும் அந்நிலையில் தொடர்வதும் அந்நிலையைத் தவற மறுப்பதுமே தவறு. எனவே தவறுகளை அறிந்து அந்நிலை களைந்து எந்நிலையிலும் தவறாது முன்னிலை ஏற்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)