சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்
- அ. தாமஸ்
ஆவணங்கள் நம்மை அதிகாரப்படுத்தும். ஆனால் ஆணவமோ நம்மையே நாம் அறிய விடாமல் கெடுக்கும்.
தகுதியறிந்து தடம் பதிப்பதே தன்னிலை உயர்த்தும் உயரிய நெறி. தன்னிலை அறியாதவர்களே ஆணவத்தால் ஆட்கொள்ளப்பட்டு தன் அடையாளம் இழந்து நிற்கிறார்கள்.
பதவி கிடைக்கிறது என்பதற்காக பல்லி பலசாலி ஆகிவிடாது.எனவே தகுதியான பதவியைப் பெறுவதில் தான் நாம் தன் முனைப்புக் காட்ட வேண்டும்.
தண்ணீர் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஆனால் எந்நிலையிலும் தண்ணீர் என்ற தன்மையை மாற்றிக் கொள்வதில்லை.இந்நிலை உணர்ந்த மனிதர்களே உயர்நிலை அடைகிறார்.
நம்மிடம் கருணை பெற்றவன் நம்மைக் கடவுளாகப் பார்க்கிறான் என்பதற்காக நாம் கடவுளாகி விட முடியாது. எனவே என் நிலையிலும் நம் நிலை உணரும் பொழுதே உயர்நிலை அடைய முடியும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)