சிந்தனைச் சிதறல்.. திருத்துவதை விட தவிர்ப்பது மேல்!
May 28, 2026,04:30 PM IST
- அ. தாமஸ்
தவறான ஒன்றை தவறென ஏற்க மறுக்கும் ஒருவரிடம் அது தவறு என உணர்த்த நினைத்தால் அவர்கள் நம்மையே தவறென இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துவார்கள். எனவே அத்தகையவர்களைத் திருத்துவதை விட தவிர்ப்பது மேல்.
தான் அறிந்த ஒன்றை அறியாதவன் போல் இருப்பதும்; அறியாத ஒன்றை அறிந்தது போல் நடிப்பதுமே இன்றைய உலக வழக்காகி விட்டது. எனவே இத்தகையவர்களை வியந்து பார்ப்பதை விட விலகியே இருப்பது சிறப்பு.
ஒருவன் தன் தவறை தவறென தெரிந்தும் சரி என்று அடையாளப்படுத்த முனையும் பொழுது அவனை திருத்த நினைப்பதை விட அவனின் நிலையில் சரி என்போம் இல்லையேல் அது நம் உணர்வையும் சிதைக்கும் மனதையும் கெடுக்கும்.
ஆம் இத்தகைய செயல் மணலை மட்டுமே வைத்து மாளிகை கட்டுவதற்கு ஒப்பானது.