சிந்தனைச் சிதறல்.. மாறுவார்கள் என எதிர்பார்ப்பதை விட.. எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்வோம்!

Su.tha Arivalagan
Sep 02, 2026,03:25 PM IST

- அ. தாமஸ்


காத்திருக்க வேண்டிய இடத்தில் கடந்து போவதும், கடந்து போக வேண்டிய இடத்தில் காத்திருப்பதும் கூட முறையற்ற அணுகுமுறைதான். சில மனிதர்களிடம் காத்திருக்கும் பொழுது கருணை பிறக்கும்; வேறு சிலரிடமோ, நாம் காத்திருப்பது அவர்களின் மனதில் 'தாங்களே கடவுள்' என்ற எண்ணத்தையே உயர்த்தும்.


இத்தகையவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதை விட, அவர்களைப் பற்றிய நம் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்வதே நம் நிலையை உயர்த்தும்.




தங்களின் செயல்பாடுகள் தவறு என்று அறியாமலே செய்பவர்கள், ஒருவேளை அது தெரிந்தால் மாற்றிக் கொள்வார்கள். ஆனால், தவறு என்று தெரிந்தே செய்பவர்கள், அந்நிலையை மாற்றுவது அரிதிலும் அரிது. ஏனெனில், அவர்கள் அந்நிலையிலும் மகிழ்பவர்கள். 


சில இடங்களில் இணைந்ததால் தவறியவர்களும் உண்டு; தவறியதால் அவ்விடத்தில் இணைந்தவர்களும் உண்டு.