சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!

Su.tha Arivalagan
Aug 27, 2026,04:33 PM IST

- அ. தாமஸ்


தன் அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது. ஒன்று நிகழாது என்று தெரிந்தும், நிகழ்ந்தால் என்ன செய்வது என அஞ்சும் நாம், இன்றைய நிகழ்வுகளில் மகிழ மறந்தே போகிறோம். 


எந்த ஒன்றும் நம்மைக் கடந்ததல்ல. பணிவதும் துணிவதும் நம்மைப் பொறுத்ததுதான். நாம் ஏற்றால் பணியலாம்; மறுத்தால் துணியலாம். 




பிரச்சனைகளைச் சந்தித்து மீண்ட வரலாற்றைவிட பிரச்சனைகளைச் சந்திக்காமலே அவற்றைச் சிந்தித்தே மாண்ட வரலாறுதான் அதிகம். எனவே,  பிரச்சனைகளைச் சந்திக்க ஒருபோதும் தயங்காதீர்கள். அது நிச்சயம் நற்பலனை மட்டுமே கொடுக்கும் என்று நம்புங்கள். 


நம்முடைய திட்டமிடல், பிரச்சனைகளைத் தடுப்பது குறித்தானதாக மட்டும் இல்லாமல், தவிர்ப்பது குறித்தானதாகவும் இருந்தால் அதுவே சிறப்பு. சில நேரங்களில், தடுத்தல் சில சங்கடங்களைக் கொடுக்கும். ஆனால், தவிர்த்தல் பல சங்கடங்களையே தவிர்க்கும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)