சிந்தனைச் சிதறல்.. தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதே ஆபத்தானது!

Su.tha Arivalagan
Aug 28, 2026,05:14 PM IST

- அ.தாமஸ்


எந்த ஒன்றையும் தெரியாமல் இருப்பதைவிட, தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதுதான் ஆபத்தானது. ஒரு விடயம் தெரியாது என்று சொல்வதற்கும் அதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும் தானே.


தெரியாத ஒன்றைத் தெரியாது என்று சொல்வதற்குத் தாமதிக்க வேண்டாம். தெரியும் என்று சொல்லித்  தடுமாறுவதைவிட, தெரியாது என்று சொல்லித் தடம் மாறுவதைத் தவிர்ப்பது சிறந்தது.


எல்லாம் தெரியும் என்பதும், எதுவுமே தெரியாது என்பதும்  ஆபத்தானவை. தெரிந்ததைத் தெரிந்தது என்றும், தெரியாததைத் தெரியாதது என்றும் வெளிப்படைத்தன்மையோடு அறிவிப்பது ஆரோக்கியமானதே.




எனவே, தெரிந்ததைத் தெளிவாகச் சொல்வோம்; தெரியாததை விரைவில் தெரிந்து கொள்வோம். பிறர்க்கும் நாம் தெரிந்ததைத் தெளிவாகச் சொல்வோம். 


தெரியும் என்பதை விட, தெரியாது என்பதுதான் நம்மைக் காக்கும் ஆகச்சிறந்த ஆயுதம். அது நம் செயல்களில் தவறாமல் இருப்பதற்கான எச்சரிக்கை மணி. எந்த ஒன்றையும் தெரியும் என்று சொல்லிவிட்டுத் தெரியாமல் தடுமாறுவதைவிட தெரியாததைத் தெரியாதது என்று சொல்லிவிட்டு, தெளிந்து செயல்படுவது மேலானது.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)