இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

Su.tha Arivalagan
Sep 07, 2026,12:27 PM IST

- ஆ.வ.உமாதேவி


2009 ஆம் ஆண்டு என்னிடம் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்ற மாணவன் S.யுவராஜ். இவர், தற்போது திருவள்ளூர் காவல் நிலையத்தில் காவலராக பணியில் இருக்கிறார். 


யுவராஜுக்கு 2024 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. நானும் என் கணவரும் திருமணத்திற்கு சென்று மனதார வாழ்த்தி விட்டு வந்தோம். 


இன்று திடீரென வீட்டிற்கு வந்தார் மனைவி குழந்தையுடன். காரணம், ஆசிரியர் தினத்திற்காக வாழ்த்து பெறவும், தன் மகளின் முதல் பிறந்த நாளான இன்று குழந்தைக்கு ஆசி வழங்கும் படியும் இனிப்புகளுடன் வந்து நின்றார். 




எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு ஆசிரியருக்கு இதைவிட பெரிய சிறப்பு இருக்க முடியாது. மனதார வாழ்த்தினேன். இந்நினைவு எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் என் நினைவை விட்டு அகலாது. 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முருக்கம்பட்டு காலனி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்)