பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
- அ.வெங்கடேஷ்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் அ வெங்கடேஷ் எழுதியுள்ள 3 கவிதைகளின் தொகுப்பு..
வீடு
பனிக்குப் போர்வையாகவும்
வெயிலுக்கு நிழலாகவும்
நினைவுகளை சேர்த்து வைக்கும் பெட்டகமாக
அன்புகள் கூடும்
உறவுகள் பெருகும் இல்லம்!
அறை
விரியும் கனவுகளும்
சமூகத்தின் நாளைய விருட்சங்கள்
போர்த்திய விதையாய்
தம்பதிகளின் அந்தரங்கத்தைக்
காக்கும் பெட்டகமாய்
வாசிப்பு கூட்டிச் செல்லும் இடங்களுக்கு
இருந்த இடத்திலிருந்து செல்ல
படைப்புகளின் உரை நிலமாய்
விதை நிலமாய் உள்ள அறை
--
தொடர்வண்டி இழுத்தது
அடுக்கிய பெட்டிகளை
இரும்பு பாதையில் இழுத்துச் செல்லும்
தொடர்வண்டி எடுத்துச் சென்ற சத்தங்களுக்குப் பின்
கவிழ்ந்த மௌனத்தில்
விரிந்த நீல வானம்
(கவிஞர் அ வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இருள் என்பது குறைந்த ஒளியே என்ற நூலின் ஆசிரியர்)