கடிகாரத்தை கொதிக்க வைத்து .. முட்டையில் டைம் பார்த்த ஐன்ஸ்டீன்!
Jan 19, 2026,12:41 PM IST
- கவிஞர் க.முருகேஸ்வரி
மனிதகுலம் கண்ட மகத்தான விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி... என் ஆங்கில ஆசிரியர் கூறிய நகைச்சுவை கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நமக்குத் தெரிந்த அறிவியல் அறிஞர்களில் ஐன்ஸ்டீன் மிகவும் முக்கியமானவர். நோபல் பரிசு பெற்றவர். அவரின் மூளை பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை தான் இது.
ஐன்ஸ்டீன் ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?????? ஒரு நாள் ஐன்ஸ்டீன் மனைவி அவசர வேலையாக வெளியே செல்லசெல்ல வேண்டியிருந்தது. ஆதலால் ஐன்ஸ்டீனிடம் ஒரு வேலை கொடுத்தார்.முட்டையை வேக வைக்குமாறு கூறினார். முட்டையத் தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கக் கூறினார்.
சரியாக உங்கள் கடிகாரத்தில் டைம் பார்த்துக் கொண்டே இருங்கள் என்றும் எச்சரித்து விட்டு சென்றார். ஆனால் இரண்டு நிமிடத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அவருக்கு தான் ஐன்ஸ்டீன் பற்றித் தெரியுமே!!!! சமையலறைக்குள் வேகமாக நுழைந்தார். பார்த்ததும் கண்களில் கோபம் கொப்பளித்தது.
அடுப்பில் வெந்தது முட்டை அல்ல..... அவரின் கைக் கடிகாரம்..... ஆம் ....கடிகாரத்தை வேக வைத்து விட்டு... முட்டையில் டைம் பார்த்துக் கொண்டிருந்தார் நம்ம ஆளு.
இது மட்டும் இல்லைங்க.. ஐன்ஸ்டீன் தனது தொலைபேசி எண்ணைக் கூட மறந்து விடுவாராம்..... தனது வீட்டு முகவரியையும் மறந்து விடுவாராம்..... ஐன்ஸ்டீன் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு விசாரித்து வீட்டிற்கு வருவாராம். இதை அறிஞர்களின் மறதி என்று கூறுவார்கள்.
கடினமான அறிவியல் ஆராய்ச்சிகளில் அவர்களின் சிந்தனை எப்போதும் இருப்பதால் அன்றாட செயல்பாடுகளில் இது போன்ற மறதிகள் இருக்கத் தான் செய்யும்..... இதை அவர் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வாராம். எப்போதும் தன் நண்பர்களுடனும் தன்னிடம் வேலை செய்பவர்களிடமும்
குறும்புத்தனம் செய்து கொண்டே இருப்பாராம்!