ஆண்டாள் கவிதை!
Dec 27, 2025,10:13 AM IST
- கலைவாணி ராமு
துளசி வாசத்தில் பிறந்தவளே....
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளே
நம்மையெல்லாம் ஆண்டாளே...
ஆதி திருவரங்கனையும் ஆண்டாளே....
மலர் மாலையில் மாயவணை மயக்கிய ஆண்டாளே...
சுத்தர வடிவுடையவளே....
கண்ணாடியும் அழகானது
உன் முகம் பார்த்ததால்....
பூ மாலையில் பூத்து குலுங்குபவளே....
ஸ்ரீவில்லிபுத்தூரின் கதா நாயகியே.....
திருப்பாவை
திருமகளே....
கொஞ்சும் கிளியை கையில் ஏந்தியவளே....
மார்கழியில் தினமும் போற்றப் படுபவளே.....
மங்களத்தை அள்ளிக் கொடுப்பவளே.....
சூடிக் கொடுத் சூடர் கொடியாளே....
பட்டாடைகளிள் பவனி வந்த பவதாரணியே....
மணக்கும் மலர்களை சூடிய கொண்டையுடைய கோதையே....
உன்னனைப் பனிந்து பயன் பெருவோம் தினமும்!