பாலமேடு ஜல்லிக்கட்டு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை பரிசளித்த நடிகர் சூரி!

Meenakshi
Jan 16, 2026,01:13 PM IST

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை  நடிகர் சூரி பரிசளித்துள்ளார்.


மதுரை பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, விழா கமிட்டி சார்பாகவும், ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.




அங்கு வந்திருந்த மதுரை மண்ணின் மைந்தரான நடிகர் சூரி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஒரு அழகான வெண்கலக் காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.


நடிகர் சூரி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார். இந்த ஆண்டு துணை முதலமைச்சருக்கு சிலை வழங்கியதன் மூலம் தனது கலாச்சாரப் பற்றை வெளிப்படுத்தியுள்ளார். வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளுக்குத் தங்கக் காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகளை வழங்கி துணை முதலமைச்சர் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.