நடிகர் யோகி பாபு விரைவில் டைரக்டர் ஆக வேண்டும்: நடிகர் விஜய் சேதுபதி!

Meenakshi
May 17, 2025,03:08 PM IST

சென்னை: யோகி பாபு என்னிடம் சில கதைகள் சொல்லி இருக்கிறா். அவர் விரைவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஏஸ் பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஏஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் மே 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




இந்நிலையில்,  ஏஸ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதி பேசுகையில்,  முதன்முதல்ல வர்ணம் படத்துல என்னைய நடிக்க ரெக்கமண்ட் பண்ணியது ஆறுமுககுமார் சார்தான். அவரை எப்போதும் மறக்க மாட்டேன்.  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல நடிக்க என்னை ரெக்கமண்ட் பண்ணியவரும் ஆறுமுககுமார் சார்தான். 


இருண்ட வீட்டுல அகல்விளக்கு எத்துற மாதிரி என்னோட வாழ்க்கையில் விளக்கு ஏத்தியவரு ஆறுமுககுமார் சார்தான். எங்க அப்பாவோட கடைசி காலத்துல தன் புள்ள உறுப்படுமா? எனக் கேட்போது வர்ணம் படத்துல நடிச்ச புகைப்படத்தைக் காமிச்சு உன் புள்ளைக்கு நடிக்க வருது. நல்ல வந்துருவேன்னு சொன்னேன். அதானல், நடிக்க எனக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்ததுக்கு நன்றி சார்.


சில பேரை எனக்கு பார்த்த உடனே பிடிக்கும். ஆனால் சில பேரை பிடிக்காது. அந்த மாதிரி இந்தப்படத்தோட இசையமைப்பாளர் ஜஸ்டினை எனக்கு பார்த்த உடனே பிடிச்சது. ரொம்ப சூப்பரா இந்நதப் படத்துக்கு இசையமைச்சுருக்காரு.


யோகி பாபு என்னிடம் சில கதைகள் சொல்லி இருக்கிறா். அவர் விரைவில் டைரக்டர் ஆக வேண்டும், அவர் இந்த படத்தில் 2வது ஹீரோ மாதிரி இருக்கிறார். அவரைப் பற்றி சில நெகட்டிவ் தகவல்கள் பரனுகின்றன. ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று கூறியுள்ளார்.