சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

Meenakshi
Apr 18, 2025,01:21 PM IST

சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் சபரிமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் ரவி மோகன் மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் அடிப்படையில் நல்ல நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.ஜெயம் ரவி என்ற தனது பெயரை சமீபத்தில் ரவி மோகன் என்று மாற்றியுள்ளார். தற்போது ரவி மோகன் மற்றும் கார்த்தி ஆகியோர் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளனர்.




நடிகர் கார்த்தி வா வாத்தியார் மற்றும் சர்தார் ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு  படங்களும் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அதே போல நடிகர் ரவி மோகனும் காராத்தே பாபு, ஜீனி திரைப்படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனி ஒருவன் 2 படத்திலும் ரவி மோகன் விரைவில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், ரவி மோகன் மற்றும் கார்த்திக் இருவரும் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இருவரும் மலையணிந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரவி மோகன் ஏற்கனவே ஐயப்பன் மலைக்கு சென்று அனுபவம் கொண்டவர். கார்த்தி முதல் முறையாக விரதம் கடைப்பிடித்து சபரிமலைக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும்  சேர்ந்து சபரிமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.