என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
கொச்சி: கேரளா சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகை பாவனா போட்டியிடப் போவதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. இதற்கு அவர் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறும் அதே சமயத்தில்தான் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது இடதுசாரி கூட்டணி 2வது முறையாக ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளது. பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் வென்ற உற்சாகத்தில் சட்டசபைத் தேர்தலிலும் ஏதாவது சாதிக்க முனைப்புடன் காத்திருக்கிறது.
இந்த நிலையில் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவரும், தமிழிலும் நடித்துள்ளவருமான நடிகை பாவனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து பாவனா விளக்கம் கொடுத்துள்ளார். நான் அரசியலுக்கு வருகிறேன் என்பது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
தற்போது மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். எனது முழுக் கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது என்று கூறியுள்ளார் பாவனா.