எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்...பயண விபரம் வெளியீடு
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை சென்னையில் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்க உள்ளார். ஏப்ரல் 01ம் தேதி வரை அவர் மேற்கொள்ள உள்ள தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் குறித்த விபரங்கள் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த கட்டமாக விரைவில் அதிமுக.,வின் விரிவான தேர்தல் அறிக்கையும், அதிமுக போட்டியிடும் தொகுதிகள் எத்தனை எவை, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சார பயணம் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தேர்தல் பிரச்சார பயணம் விபரம் :
மார்ச் 25 - மயிலாப்பூர்
மார்ச் 27 - ஆந்தூர், தாம்பரம்
மார்ச் 28 - ஆர்.கே.நகர், திருவெற்றியூர்
மார்ச் 29 - நாகர்கோவில், ராதாபுரம்
மார்ச் 30 - கடையநல்லூர், கோவில்பட்டி
மார்ச் 31 - சிவகாசி, பரமக்குடி
ஏப்ரல் 01 - சிவகங்கை, புதுக்கோட்டை
தினமும் மாலை 4 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் எடப்பாடி பழனிச்சாமி, 6 மணிக்கு அடுத்த ஊரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னையில் துவங்கி, புதுக்கோட்டையின் தனது பயணத்தை நிறைவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
மார்ச் 30ம் தேதி துவங்கி, ஏப்ரல் 6 ம் தேதி வரை தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளதால், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்த கட்ட சுற்றுப் பயணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது அடுத்த கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் போது, ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்வார் என சொல்லப்படுகிறது.