சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
Aug 18, 2025,06:44 PM IST
திருவண்ணாமலை: தமிழகத்தைச் சார்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு, கட்சி பேதம் இன்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.