வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள ஐஐடியில் படிக்கும் மாணவர் ஒருவர் சாட்ஜிபிடி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது புராஜக்ட்டை சமர்ப்பித்து ஏ + மதிப்பெண் வாங்கி அசத்தியுள்ளார்.
IIM அகமதாபாத்தில் AI பயன்படுத்த அனுமதி உண்டு. யுகேந்தர் குப்தா என்ற அந்த மாணவர், AI உதவியுடன் செய்த புராஜெக்ட்டுக்கு A+ கிரேடு கிடைத்துள்ளது. இது அவருக்கே ஆச்சரியத்தை அளித்தது. பொதுவாக, இந்த கிரேடு முதல் 5% மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது, கல்வி முறையில் AI-ன் பங்கு குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
IIM அகமதாபாத்தில் MBA படிப்பது நிறைய அசைன்மென்ட்கள், புராஜெக்ட்கள் மற்றும் ரிப்போர்ட்கள் நிறைந்தது. IIM அகமதாபாத்தில் எந்த ரிப்போர்ட்டுக்கும் A+ கிரேடு வாங்குவது கடினம். சில பேராசிரியர்கள் யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலானோர் முதல் 5% அல்லது அதற்கும் குறைவான மாணவர்களுக்கே கொடுப்பார்கள். A+ கிரேடு ஒரு பதக்கம் மாதிரி என்று அவர் தனது LinkedIn-ல் எழுதியுள்ளார்.
அழகுப் பொருட்கள் பற்றிய மார்க்கெட்டிங் புராஜெக்ட்டுக்காக குப்தா எட்டு கடைகளுக்குச் சென்று, வாடிக்கையாளர்களை கவனித்து, அவர்களின் கேள்விகள் மற்றும் நடவடிக்கைகளை ஆடியோவாக பதிவு செய்தார். பின்னர், அந்த ஆடியோ குறிப்புகளை ChatGPT-ல் பதிவேற்றினார். ChatGPT ஒரு சிறந்த ரிப்போர்ட்டை அவருக்காக ரெடி செய்து பரிந்துரைத்தது. அதைத்தான் அவர் சமர்ப்பித்துள்ளார். அதற்குதான் அவருக்கு A+ கிரேடு கிடைத்தது.
இதுகுறித்து குப்தா கூறுகையில், ஒவ்வொரு உரையாடலுக்கும் நான் ஒரு ஆடியோ குறிப்பை அனுப்பினேன். கேம்பஸுக்குத் திரும்பியதும், ChatGPT-யிடம் எங்கள் புராஜெக்ட் தேவைகளை விளக்கினேன். முழு ஆடியோ டிரான்ஸ்கிரிப்டையும் பதிவேற்றினேன். நிறைய எடிட்டிங் செய்த பிறகு, அது IIM அகமதாபாத்தில் எனக்கு கிடைத்த சிறந்த கிரேடு வாங்கிய புராஜெக்ட்களில் ஒன்றாக இருந்தது என்று கூறினார்.
AI-ஐப் பயன்படுத்தி மாணவர்கள் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். செயற்கை நுன்னணறிவுத் தொழில்நுட்பத்தால் கல்வியில் மாபெரும் மாற்றங்கள் வருங்காலத்தில் ஏற்படும் என்பதையே யுகேந்தர் குப்தாவின் ஸ்டோரி நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இது தற்போது நிலவி வரும் ஏஐ புரட்சியை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் என்றும் உணர்த்துகிறது.