உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீதான கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது."
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவு செய்வது என்பது வேறு என்றும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எடுக்கப்படும் கைது நடவடிக்கை அரசியல் பின்னணி கொண்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் வேளையில் நடவடிக்கை :
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இந்த அரசு கைது செய்யத் துடிப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாளையே பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய நினைப்பது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் மிக முக்கிய அங்கமாகும்.அந்தப் பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத பேரவைக் கூட்டத்தை நடத்த நினைக்கும் அரசின் எண்ணத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீதான கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.