அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
Apr 19, 2026,12:23 PM IST
- கா.சா.ஷர்மிளா
சித்திரை மாத பொன்னான நாளிது...
மூன்றாம் பிறையில் வரும் நாளிது...
அள்ள அள்ள
குறையாத அமுதசுரபி
வழங்கிய அற்புத நாளிது..
அன்னபூரணியின் அருளைப்பெறும் அற்புத அமுதநாளிது..
குபேரனின் கடன் அடைந்திட்ட சிறப்பு நாளிது..
தான தருமங்கள் செய்வதற்கு உகந்த நாளிது...
குசேலன் ஒரு பிடி அவலால் ..
கிருஷ்ணனால்
குபேரயோகம் பெற்ற நாளிது...
பாஞ்சாலி மானம் காக்க புடவை வளர்ந்த நாளிது...
இல்லாமையை இல்லாமலாக்கும் நல்ல நாளிது...
ஐஸ்வரலக்ஷ்மியை வீட்டிற்கு அழைக்கும் சுகந்த நாளிது..
புதிய தொழில் ஆரம்பிக்க சிறந்த நாளிது..
புதிதாக புதிய கலைகளைக் கற்கும் நாளிது...
தங்கம் வெள்ளி நகைகள் வாங்க சிறந்த நாளிது...
குறையாது தேயாது வளரும் நாளிது...
அட்சய தீஜ் என்று
சமணர்களும்...
விதை விதைக்க சிறந்தநாளாக பீகாரிலும்...
கிணறுவெட்டுதல்
வீடுகட்டுதல்
சிறந்தநாளாக ஒடிசாவிலும்..
நல்லது செய்தால் குறையாமல் பெருகும்
புனித நாளிது அக்ஷயதிருநாளிது ...
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)