உடைமை தன்மை பற்றி (All about Possessiveness) அலசிப் பிழிவோமா?
- மைத்ரேயி நிரஞ்சனா
பொசசிவ்னஸ் அல்லது உடைமை தன்மை (அல்லது உரிமைத் தன்மை) என்றால் என்ன? இது பொருட்களை சொந்தம் கொள்வது என்பதை தாண்டி இதனுடைய வேர்கள் மிக ஆழமாய் செல்கிறது..
இது பொருட்களை வைத்திருப்பது பற்றி மட்டுமல்ல.. பொருட்களை தனது என்று சொந்தம் கொண்டாடுதல், உரிமையாக்கி கொள்ளுதல், அதற்கு தான் தான் முதலாளி என்று நினைத்தல்.. இவை எல்லாமே உடமைத்தன்மை அல்லது பொசசிவ்னஸ் Possessiveness) என்று நாம் சொல்லலாம்..
இது பொருட்களையும் தாண்டி.. மனிதர்களை சொந்தம் கொள்ளுதல் பிடித்து வைத்து கொள்ளுதல் அல்லது தனக்குத்தான் உரிமை.. தான் முதலாளி என்ற ஒரு உணர்வில் இருத்தல் இதையும் நாம் உடைமை தன்மை என்று சொல்லலாம்..
நாம் ஒரு பொருளை உரிமையாளர் என்று நினைக்கும் போது அந்த பொருளுக்கு நாம் அடிமையாக ஆகிவிடுகிறோம் என்பதை உணர்ந்து இருக்கிறோமா..?
இந்தியாவில் கணவனை பதி என்று அழைப்பார்கள்.. பதி என்றாலே உரிமையாளர் அல்லது முதலாளி என்று அர்த்தம்.. அதாவது ஒரு கணவனுக்கு மனைவி அடிமை என்பது போல் பொருள் ஆகிறது.. மனிதன் தனக்கு அடிமையாக எதை வைத்து இருந்தாலும் அதற்கு தானும் அடிமையாகாமல் இருக்க முடியாது.. இது ஆழமாக பார்க்க வேண்டிய உண்மை..
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் ஒரு பசுவை கயிற்றினால் கட்டி ஒரு கிராமத்தின் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்..
அப்போது அங்கு மரத்தடியில் ஒரு ஞானி அமர்ந்து தனது சீடர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்..
காஷ்முஷ் பசு உடன் செல்வதை பார்த்த ஞானி தனது சீடர்களிடம் கேட்டார்.. அந்த மனிதர் பசுவை கயிற்றினால் இழுத்துச் செல்கிறாரா? அல்லது பசு அந்த மனிதனை இழுத்துச் செல்கிறதா என்று கேட்டார்..
அப்போது சீடர்கள் சொன்னார்கள்.. அந்த கயிறு பசுவின் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது அதனால் அந்த மனிதர் தான் பசுவை இழுத்து செல்கிறார் என்று..
இப்போது ஞானி சொன்னார்.. பசு இப்போது ஓட ஆரம்பித்தால் அந்த மனிதன் அதன் பின்னால் ஓடுவானா இல்லையா..
இப்போது சீடர் சொன்னார் நிச்சயமாக ஓடுவார்.. பசு முன்னே ஓடும் அதன் பின்னே அந்த மனிதரும் ஓடுவார்..
இப்போது ஞானி சொன்னார்.. இந்த கயிறு என்னவோ பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கிறது அதை நாம் எல்லோரும் பார்க்க முடிகிறது.. ஆனால் அந்த கயிறு அந்த மனிதனின் கழுத்திலும் கட்டப்பட்டிருக்கிறது அதை நாம் பார்க்க முடியாது ஆனால் அந்த உண்மை நமக்கு புரியும் என்று கூறினார்..
ஏன் இந்த உடமை தன்மை மனிதனை ஆளுகிறது? இது ஆழமாக பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம்..
நாம் யாரும் நமக்கு மாஸ்டராக இல்லை..
There is an inner void in all of us.. நாம் நமக்கு மாஸ்டராக இல்லாத காரணத்தினால்.. வெளியில் இருக்கும் பொருட்களையும் மக்களையும் உரிமை கொள்ள நினைக்கிறோம்.. அதனால் நம்முடைய உள்ளே இருக்கும் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள முடியும் என்ற மாயையில் சிக்கி இருக்கிறோம்.. வெளியில் இருக்கும் பொருட்களையும் மக்களையும் உரிமையாக்கிக் கொள்வதால் அடிமைப்படுத்துவதால் நமக்கு துன்பம் மட்டுமே மிஞ்சுகிறது ஏனெனில் இது Double Slavery.. பிறரை அடிமைப் படுத்துகிறோம்.. நாமும் அதற்கு அடிமையாகிறோம்..
நிறைய பொருட்களை சேகரித்த பிறகு அது தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை நாம் அறிய முடியும்.. புகழோ பணமோ, பவரோ நமக்கு இந்த உள்ளே இருக்கும் வெற்றிடத்தை இன்னும் அதிகமாக காண்பிக்கும்..( Because of the contrast ) பணமும் புகழும் அதிகமாக சம்பாதித்த சிலர் அந்த வெற்றிடத்தை மிக ஆழமாக உணரும் காரணத்தினால்.. கேட்பார்கள்.. இந்த பணம் சொத்து எல்லாவற்றையும் விட்டு விடுவதினால் இதை சரியாக்கி கொள்ள முடியுமா? என்று? அவை யாவும் இருக்கும்போது, இருந்த வெற்றிடம் அவை இல்லாத போது எப்படி சரியாகும்?
நாம் நமக்கே மாஸ்டர் என்ற நிலையை .. உள்ளே இருப்பது என்ன என்பதை உணராமல்.. அறியாமல்.. அடைய முடியாது.. இந்த உள்நிலையை நாம் உணரும்போது மட்டுமே.. வெளியே பணம் இருந்தாலும், இல்லை என்றாலும் புகழ் இருந்தாலும், இல்லை என்றாலும்.. நாம் சக்கரவர்த்தி தான் என்று நிலையை உணர்வோம்.. அது தேவைகள் மற்றும் ஆசைகள் இல்லாத நிலை.. அப்போது இந்த உடைமை தன்மை காணாமல் போய்விடும். இது ஒரு பற்றற்ற நிலை.. கடவுள் நிலை..
Peace & Love To U All.
நாம் தொடர்வோம்..