அன்பே அழகே அற்புதமே ஆரமுதே!

Su.tha Arivalagan
Jul 08, 2026,03:34 PM IST

- அமிர்தம் ரமேஷ்


அன்பே

அழகே

அற்புதமே

ஆரமுதே

அழகின் 

அதிசயமே

உன் நகைமுகம்

கண்டு

மயங்குது

உள்ளமது

கள்ளமில்லா 

புன்னகையுனது




உன்

பூமுகம்

கண்டாலே

மனது

தோகை 

விரித்தாடுதே

தீட்டி வைத்த

சிற்பமொன்று

வயலோரம்

சிங்கார

நடைபயிலுதோ

பசும்புல் நுனியெல்லாம்

பனிமுத்துக்கள்

படர்ந்திடுதே

குளிரோடைதனில்

வயலோரம்

வரப்பு மீது

நீ பாதம் பதிக்க

உன் அழகு

நடையில்

அன்னமும்

மயங்குமே

அன்னக்கிளியே

உன் அழகை

கண்ட நெற்பயிர்களும்

மகிழ்வில்

கூத்தாடுதே

வண்ணமயிலே

வாகாய் அசைந்து

வரும் தேரே

தெம்மாங்கு

படித்திடவா

உன் நளினமான

நடையழகைக்

கானும்

உள்ளங்களுக்குள்

எத்தனை எத்தனை 

இன்பம்

கவிஞர்

நெஞ்சில்

கற்பனை

ஊற்றாய்

பொங்கும்