Tamil Poem: பூக்களின் தேவதையே.. ரோஜா!

Su.tha Arivalagan
Jul 13, 2026,03:18 PM IST

- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்


பூக்களின் தேவதையே

வண்ணமலர் அழகியே

எண்ணிலடங்கா

வண்ணங்கள்


தேன்சொட்டும் இதழ்கள் அடிமையான

வண்ணத்துப் பூச்சிகள்

காக்க கவசமாய் முட்கள்

அழகிற்கோர் குறைவில்லை


பக்கம் வராத

பட்டாம் பூச்சிகள்

இல்லை

புன்னகைக்கும்

ஓர் எல்லையில்லை




உன்னை நேசிக்காத

நெஞ்சங்கள் 

இல்லை

மயங்காத உள்ளங்களும்

இல்லை

நீ இல்லாத நிகழ்வுகளும்

இல்லை


முள்ளில்லாமல் நீ

இல்லை

முழுமதி உனக்கு

நிகரில்லை


உன்னை

வர்ணிக்காத

கவிஞர்களும்

இல்லை.....!